விதிமீறிய வாகனங்களிடம் அபராத கட்டணம் வசூல்
Added : மே 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


செங்கல்பட்டு, :வாகனங்களில், அதிக ஒலி எழுப்பும் 'ஹாரன்' பயன்படுத்திய 12 வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து துறையினர் அபராதம் விதித்தனர்.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தப்பட்ட வாகனங்கள், அதிக பாரம் ஏற்றப்பட்ட வாகனங்கள் செல்கின்றன.இந்த வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த வாகனங்களை கட்டுப்படுத்தவில்லை என்றால், விபத்து ஏற்படும் சூழல் இருப்பதாக, கலெக்டர் ராகுல்நாத்திடமும் மனு அளித்தனர்.இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த பாலுார் பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதாபானு மற்றும் ஊழியர்கள், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்திய, 12 வாகனங்களை பறிமுதல் செய்து, தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், 1.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.மேலும், எம் - சாண்ட் மண் அதிகமாக ஏற்றிச்சென்ற ஒரு லாரிக்கு, 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X