நுண்ணறிவு போலீசார் மாற்றம்தாம்பரம் கமிஷனரகத்தில் சர்ச்சை
Added : மே 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



தாம்பரம்:தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், நுண்ணறிவு பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம், இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் இயங்கி வருகிறது. கமிஷனர் அலுவலகம் துவக்கப்பட்டது முதல், அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பற்றாக்குறை என, பல பிரச்னை நிலவி வருகிறது.

புலம்பல்
காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள், நுண்ணறிவு போலீசாரை இடமாற்றம் செய்துள்ளனர். சமீபத்தில், சேலையூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ., சத்யமூர்த்தி, பெரும்பாக்கம் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டார்.தாம்பரம் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுரேஷ், பல்லாவரத்திற்கும்; பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ஜான்சன், ஓட்டேரிக்கும்; சங்கர் நகர் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ., திவாகர், சேலையூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவர்களை போல், ஏராளமானோர் வெவ்வேறு இடங்களுக்கு துாக்கியடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.இதனால், புதிதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணியமர்த்தப்படுபவர்களுக்கு, அந்த காவல் நிலைய எல்லைகள், பழைய குற்றவாளிகள் குறித்த விபரங்கள் எடுப்பது, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது ஆகியவற்றில் தாமதம் ஏற்படுகிறது.

சட்டம் -- ஒழுங்கு
ஏற்கனவே, சென்னை மற்றும் புறநகரை ஒட்டிய பகுதிகள், சில தினங்களாக கொலைக் களங்களாக மாறி வரும் நிலையில், தற்போதைய நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் இடமாற்றம், சட்டம்- - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, ஓய்வு பெற்ற போலீசார் தெரிவிக்கின்றனர்.கமிஷனர் ரவி தனி கவனம் செலுத்தி, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X