அரசாணையே புரியாத கவுன்சிலர்கள்... ஆளும்கட்சியால் அல்லல்படும் மக்கள்!
Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

தொழில் மற்றும் சமூக அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து, சென்னையை விட அதிகமாக கோவையில் சொத்து வரியை உயர்த்தியிருப்பது எல்லாத் தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகளுக்கும், கடந்த, 1998ல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பின், கடந்த, 2008லும், மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது சென்னைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. சென்னைக்கு சொத்து வரி உயர்த்த வேண்டுமென்று, கடந்த, 2018ல் ஐகோர்ட் அறிவுறுத்திய நிலையில், அப்போதும் உயர்த்தப்படவில்லை; தற்போதுதான் உயர்த்தப்படுகிறது.

இப்போது சென்னையுடன் சேர்த்து கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில், சென்னை தவிர்த்து மற்ற அனைத்து நகர உள்ளாட்சிகளிலும் அரசு நிர்ணயித்த அதிகபட்ச சொத்துவரியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வருகின்றனர். சென்னைக்கு மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணையில், மாநகராட்சி மன்றங்கள் தீர்மானம் செய்யலாம் என்று அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சியில் ஆளும்கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அதிகபட்சமான சொத்து வரி உயர்வை ஏற்றுக்கொண்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாமன்றத்தின் அதிகாரமும், அரசாணையின் அர்த்தமும் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு புரியவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அரசு மேலிடத்திலிருந்து அதிகாரிகளுக்கும், ஆளும்கட்சி தலைமையிடமிருந்து இங்குள்ள தி.மு.க.,கவுன்சிலர்களுக்கும் வந்துள்ள வாய்மொழி உத்தரவின் காரணமாகவே இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கட்டடத்தின் பரப்பளவை பொறுத்து, 600 சதுரஅடி, 600-1,200 சதுரஅடி, 1,201-1,800 சதுரஅடி, 1,800 சதுர அடிக்கு மேல் என, குடியிருப்புகளுக்கு நான்கு விதமாக சொத்து வரி உயர்த்தப்படுகிறது. அதிலும் வணிகக் கட்டடங்களுக்கே அதிகபட்சமாக, 150 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இதன்படி உயர்த்தினாலும், சென்னையை விட கோவையில் அதிகமான சொத்து வரி கட்ட வேண்டியிருக்கும். அதாவது, 1998ல் சென்னையில், 10 ஆயிரம் ரூபாய் செலுத்திவந்த ஒரு கட்டடத்துக்கு, இப்போது, 100 சதவீதம் வரி உயர்த்தினாலும், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி செலுத்த வேண்டும். அதே கோவையில், 1998ல், 10 ஆயிரம் ரூபாய் வரி செலுத்திய கட்டடத்துக்கு, 2008ல், 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதால், 14 ஆண்டுகளாக ஏற்கனவே, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றனர்.






அதே கட்டடத்துக்கு இப்போது மறுபடியும், 100 சதவீதம் வரி உயர்த்தப்படும்போது, 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயரும்போது, இந்த வித்தியாசம் அப்படியே உயர்ந்து கொண்டிருக்கும். இதனால், சொத்து வரி உயர்வை இப்போது சமமாக்கும்படி, சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டுமென்று தொழில் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

அதாவது, குடியிருப்புகளுக்கு, 600 சதுரஅடி கட்டடத்துக்கு, 25 சதவீத உயர்வை, 20 சதவீதமாகவும், 601-1,200 சதுர அடிக்கு, 50 சதவீதத்தை, 40 ஆகவும், 1,201-1,800 சதுர அடிக்கு, 75 சதவீதத்தை, 60 ஆகவும் குறைக்க வேண்டும். இதேபோல், தொழிற்சாலை கட்டடத்துக்கு, 75 சதவீதத்தை, 30 சதவீதமாகவும், வணிகக் கட்டடங்களுக்கு, 100 சதவீதத்தை, 40 சதவீதமாகவும் குறைக்க வேண்டுமென்று தொழில் மற்றும் வர்த்தக சபை கோவை கிளை கோரியுள்ளது.

ஆனால், இவை எதையுமே பொருட்படுத்தாமல் சொத்து வரியை அப்படியே உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக தி.மு.க., அரசு எப்போதுமே சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கோவையை அப்பட்டமாகப் புறக்கணிப்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
28-மே-202213:04:23 IST Report Abuse
Desi தரமான படிப்பறிவு இருந்தால் தானே
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
28-மே-202212:01:00 IST Report Abuse
Rangarajan Pg அரசியல்வியாதிகளுக்கு அரசாணை புரிய வேண்டும் என்று நினைப்பதே மிக பெரிய எதிர்பார்ப்பு,, அதுவும் தற்போது ஆளுவது எந்த கட்சி,?? , திமுக,,, அவர்களுக்கு எழுத படிக்க தெரியுமா?,, நல்லவிதமாக சிந்திக்க தெரியுமா?,, நல்ல விஷயங்கள் புரியுமா?,,, எப்படி இப்படி எல்லாம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிர். இதை எல்லாம் தெரிந்து தானே அவர்களுக்கு நம் மக்கள் ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள். இப்போது அல்லல் பட வேண்டியது தான். என்ற கண்றாவி என்றால் இவர்களோடு சேர்ந்து திமுகவை தீவிரமாக வெறுக்கும் என்னை போன்றவர்களும் அல்லல்படுகிறோம் அசிங்கப்படுகிறோம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-மே-202208:25:35 IST Report Abuse
Girija என்ன மொழி செம்மொழி............ ஒரு பக்க மனு கூட பிழையில்லாமல் படிக்க தெரியல, எழுத தெரியல , பிளஸ் 2 வில் 60% 70% என்று மார்க் , இதில் நீட் விலக்கு வேண்டுமாம் ? ஏனென்றால் இவர்கள் தலைவலிக்கு கூட அமெரிக்க சென்று வைத்தியம் பார்த்துக்கொள்வார்கள், இவர்கள் மருத்துவரக வந்து சாமானியர் உயிருடன் விளையாடுவதற்கு. நம்ப கேரள அச்சன் இரண்டு செட் வேட்டி, சர்ட் மட்டும் வைத்துள்ள வளர சிம்பிள் ஆளு கம்யூனிஸ்ட் , 2 வாட்டி மேலுக்கு சுகமில்லை என்று அமெரிக்க போய் வன்னு , ஆ அமெர்க்காரன் ஆயுர்வேத வைத்தியம் வேண்டி கேரளா வருனு, என்ட குருவாயூரப்பா எது சொல்ல ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X