'பம்ப் செட்' உற்பத்தியில்... முந்தியது குஜராத்; பிந்தியது கோவை!
Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: தண்ணீர் இறைக்கும் 'மோட்டார் பம்ப் செட்' உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணியில் இருந்த கோவை தற்போது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதன் உற்பத்தியாளர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.



latest tamil news



கோவை மாவட்டமானது 'மோட்டார் பம்ப் செட்' உற்பத்தி கேந்திரமாக திகழ்கிறது. தேசிய அளவில் முதலிடத்தில் இருந்து வந்த கோவை, தற்போது உற்பத்தியில் மூன்றாம் இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளதாக குமுறும் தொழில்துறையினர், கோவையில் இருந்து பெரும்பாலான 'பம்ப்' தயாரிப்பு நிறுவனங்கள் வடமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தது தான் காரணம் என்கின்றனர்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கார்த்திக் கூறியதாவது:
'பம்ப் செட்' உற்பத்தியில் கோவை கோலோச்சிய காலம் மாறிவிட்டது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு, ஸ்திரமில்லாத வர்த்தக நிலை உள்ளிட்ட சூழல்களை தாண்டி ஒரு நிறுவனத்தை செழுமையாக கொண்டு செல்வது கடினம். கோவையில், 15க்கும் மேற்பட்ட பம்ப் செட் தயாரிப்பு தொழிற்கூடங்கள் இழுத்துமூடப்பட்டுள்ளன.

பி.ஐ.எஸ்., உரிமம் பெற்ற பம்ப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தற்போது, 366 ஆகவும், குஜராத்தில், 659 ஆகவும் உள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. கோவையில் பம்ப் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது வேதனைக்குரியது.






சர்வதேச அளவிலான புள்ளிவிபரங்களின்படி, நம் நாட்டில் பம்ப் தயாரிக்கும் தொழிற்கூடங்களின் எண்ணிக்கை, 80 சதவீதமாக இருந்தது. தற்போது, 55 சதவீதமாக குறைந்து சர்வதேச அளவில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். கோவையிலும், தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் பம்ப் உற்பத்தியில் மீண்டும் முன்னணி நிலைக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-மே-202221:50:46 IST Report Abuse
sankaseshan மத்திய அரசு கொடுக்கும் நிதி உதவிகளை சரியாக உபயோகித்து கொள்ளாத குன்றிய அரசுக்கு முட்டுக்கொடுக்கும் sai, Rafi போன்றோர் கிடைக்கும் உதவியை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு வெட்க படவேண்டும்
Rate this:
Cancel
mannaandhai -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202221:00:34 IST Report Abuse
mannaandhai இந்தியாவில் தான் 35 மில்லியன் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதாவது ஒவ்வொரு 50 மனிதருக்கும் ஒன்று. உலகில் எங்கும் இல்லாத சுயசூன்யம். மாற்று சிந்தனைகள் தேவை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-மே-202219:54:56 IST Report Abuse
Natarajan Ramanathan நான் வங்கி பணி ஓய்வு பெற்றவுடன் ஒரு சிறுதொழில் தொடங்க நினைத்து அரசு அலுவலகங்களை அணுகியபோது ஒரே மாதிரி அனைவருமே 30 சதம்வரை லஞ்சம் கேட்டார்கள். வேறு வழியே இல்லாமல் எனது முதலீட்டை கர்நாடகாவில் சிறிதும் லஞ்சம் இல்லாமல் தொடங்கிவிட்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X