பல்லடம்: ''வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது,'' என்று, ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
நீதித்துறையில், 80 சதவீத பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும், சென்னை ஐகோர்ட், 109 சதவீத வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. 20 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ள போதும், வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருவதற்கு இதுவே சான்று. வழக்குகளை விரைந்து முடிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் ரகுபதி, கயல்விழி, கலெக்டர் வினீத், மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன், எஸ்.பி., செஷாங் சாய் மற்றும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியம் பங்கேற்றனர்.