அந்தியூர் அருகே வீட்டில் இருந்து மாயமான தொழிலாளி, மரவள்ளி கிழங்கு தோட்டத்தில், சடலமாக மீட்கப்பட்டார்.
அந்தியூர் அருகே ஓலகடம், குன்றியூரை சேர்ந்தவர் செந்தில்குமார், 33; கூலி தொழிலாளி. கடந்த, 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பட்லுாரில் ஒரு மரவள்ளி கிழங்கு தோட்டத்தில், செந்தில்குமார் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. வெள்ளித்
திருப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. கூலி வேலைக்கு சென்றால் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். ஆனாலும், சாவுக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.