காங்கேயத்தை அடுத்த சிவன்மலை அருகே, அரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆரிகிரி. தனது தோட்டத்தில், 20 ஆடு மற்றும் நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். மூன்று ஆடுகள், ௧௫ நாட்டுக்கோழிகள் திருடு போனது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரி
கிறது. புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர். காங்கேயம் சுற்றுவட்டார பகுதியில், ஆடு மற்றும் கோழிகள் திருட்டு தொடர்ந்து நடப்பதால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காங்கேயம் மற்றும் சுற்று வட்டாரத்தில், அவ்வப்போது ஒன்றிரண்டு ஆடுகள் திருடு போய் வந்தது. தற்போது மூன்று ஆடுகளுடன், கோழியும் திருடு போயுள்ளது. போலீசார் இரவு ரோந்து செல்லாததே, இதற்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.