பிரக்ஞானந்தாவுக்கு பணி ஆணை வழங்கியது இந்தியன் ஆயில் | சென்னை செய்திகள் | Dinamalar
பிரக்ஞானந்தாவுக்கு பணி ஆணை வழங்கியது இந்தியன் ஆயில்
Added : மே 28, 2022 | |
Advertisement
 
Latest district News

சென்னை: 'கிராண்ட் மாஸ்டர்' ரமேஷ்பாபு பிரக்ஞானந் தாவுக்கு, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி புரிவதற்கான ஆணையை, நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, சென்னையில் நேற்று வழங்கினார்.

ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது: சதுரங்க போட்டியில் முன்மாதிரியாக விளங்கும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தங்கள் உறுப்பினர் ஆக்கியதில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெருமை கொள்கிறது.கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் சதுரங்க வீரராக மிளிர வேண்டும் என்ற கனவு நனவாக, அவரின் அனைத்து முயற்சிகளுக்கும், செயல்களுக்கும், இந்தியன் ஆயில் உறுதுணையாக இருக்கும்.

விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொடும் குறிக்கோள் உடைய, தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும், ஆதரவையும் இந்தியன் ஆயில் தொடர்ந்து வழங்கி வருவதுடன், வீரர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களை பணி அமர்த்தி வருகிறது.இந்தியன் ஆயில், 19 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினரை கண்டெடுத்து ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்கள் வருங்காலத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ, உதவி தொகை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X