கணவர், தந்தையை விடுவிக்க கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி | சேலம் செய்திகள் | Dinamalar
கணவர், தந்தையை விடுவிக்க கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி
Added : மே 28, 2022 | |
Advertisement
 


கணவர், தந்தையை விடுவிக்க வேண்டி, கர்ப்பிணி அவரது மகளுடன், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, நாராயணன் தெருவை சேர்ந்த பாபு மனைவி சங்கீதா, 26. இவர், 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர், மகள் வெண்பா, 2, தாய், மாமியார் உள்ளிட்ட உறவினர்களுடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு, மகளுடன் சேர்ந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து மீட்டதும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் விசாரித்தபோது, அவர் கூறியதாவது: கணவரை விசாரிக்க அழைத்துச்சென்று, திருட்டு வழக்கில், ஓமலுார் போலீசார், ஒரு வாரத்துக்கு முன் கைது செய்தனர்.

தொடர்ந்து தந்தை மாதேஸ்வரனை, கடந்த, 25ல் அழைத்துச்சென்ற போலீசார், எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவர் கைது செய்யப்பட்டாரா, அப்படி இருப்பின் எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் இல்லை. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர், தந்தையை விடுவிக்க வேண்டி தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, அவரிடம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X