சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கைக்கு, ஏப்., 20 முதல் மே, 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தகுதியானவை, நிராகரிக்கப்பட்டவை குறித்து, பள்ளி தகவல் பலகையில், மே, 28(இன்று) மாலை, 5:00 மணிக்கு ஒட்டப்படும். தகுதியான விண்ணப்பங்கள், 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கும் பள்ளிகளில், வரும், 30ல், குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அன்றே சேர்க்கை நடக்க
உள்ளது.
பள்ளியில் தேர்வு மையம் செயல்பட்டால், பிற்பகலில் குலுக்கல் நடக்கும். அதனால், சேலம் மாவட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள், உரிய ஆவணங்களுடன், 30 காலை, 9:00 மணிக்கு, விண்ணப்பித்த பள்ளிகளில் நடக்க உள்ள மாணவர் சேர்க்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.