சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, நாகாலாந்து மாநில சொகுசு பஸ்சை, போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, மேட்டுப்பட்டி சுங்கச்
சாவடியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த, சொகுசு பஸ்சை நிறுத்தி, அதன் உரிமத்தை ஆய்வு செய்தனர்.
அதில், தமிழகத்தில் பஸ்
இயக்குவதற்கான சாலை வரி செலுத்தப்படாதது தெரிந்தது.
அத்துடன், திருச்சியை சேர்ந்த ரங்க நாயகி என்பவர் பெயரில், நாகாலாந்து மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பஸ் என்பதும், ஓட்டி வந்தவர், பெரியகுளத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, பஸ்சை பறிமுதல் செய்தனர்.