மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாக ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையத்தில் மடீட்சியாவின் 'பிக்சல் போட்டோ, வீடியோ கண்காட்சியை' கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கினார். கண்காட்சி இன்றும், நாளையும் (மே 28, 29) நடக்கிறது.
பழங்கால கேமரா, போட்டோ கண்காட்சி, ஆடை அலங்கார அணிவகுப்புகளும் நடக்கிறது.போட்டோ கருத்தரங்கில் பிரபல போட்டோகிராபர்கள் பயிற்சி தருகின்றனர். சிறந்த படம் எடுப்போருக்கு மதுரை ராஜ்மகால், சங்கீத் வெட்டிங் வில்லேஜ், சவுபாக்கியா ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கவுள்ளன.இலவச மருத்துவ, கண் பரிசோதனை, கொரோனா தடுப்பூசி, பேசிக் கேமரா சர்வீஸ் முகாமும் நடக்கிறது.
கண்காட்சி இன்றும், நாளையும் (மே 28,29) நடக்கிறது. காலை 10:00 மணி -இரவு 7:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம் என்றார்.மடீட்சியா தலைவர் சம்பத், துணைத் தலைவர் கார்த்திக் பாபு, கண்காட்சி உறுப்பினர் தனபால், ஐநெட் பேஷன் டிசைனர்ஸ் நிர்வாகி குபேந்திர ராஜா பங்கேற்றனர். இணைச் செயலாளர் பன்சிதர் நன்றி கூறினார்.