ஆத்துார், கொத்தாம்பாடியில் தேவாதி அம்மன், கன்னிமார் கோவில்
உள்ளது. அங்கு, 5 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படும்.
அதன்படி, நேற்று முன்தினம், 24 மனை தெலுங்கு செட்டியார்
சமுதாயத்தினர் சார்பில், திருவிழா நடந்தது. சுற்றுவட்டார
பகுதிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும்
பங்கேற்றனர்.
அதற்காக, கோவிலை சுற்றி திரை கட்டப்பட்டு விழா
நடந்தது. அப்போது, 40 'கிடா' வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கறியை சமைத்து, அனைவரும் சாப்பிட்டனர். பின், அங்கு பெரிய அளவில் பள்ளம்
தோண்டி, அதில் மீதியிருந்த கறி உள்ளிட்ட அனைத்து வகை உணவு,
படையல்களை போட்டு மூடினர். பின் அனைவரும் வீடு திரும்பினர்.