சென்னை: ''பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அயனாவரம் பணிமனையை, அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா காலத்தில் பஸ்கள் இயங்காதது, ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
ஆனாலும், பஸ் கட்டணத்தை உயர்த்தாமல், அனைத்து பஸ்களையும் இயக்கி வருகிறோம். தற்போது, எனக்கு வரும் மனுக்களில் 50 சதவீதத்துக்கு மேல் பணி வாய்ப்பு கேட்டு தான் வருகின்றன. இந்த பணியின் அருமை தெரியாமல், ஊழியர்கள் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருப்பது இழப்பு என்பதை உணர வேண்டும்.
இரண்டாண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால், மாணவர்களுக்கான இலவச 'பஸ் பாஸ்' வழங்க முடியவில்லை. வரும் கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும்.இவ்வாறு சிவசங்கர் கூறினார்.மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் உடனிருந்தார்.