சிசு மரணம் இல்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடம் | சென்னை செய்திகள் | Dinamalar
சிசு மரணம் இல்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடம்
Added : மே 28, 2022 | |
Advertisement
 

சென்னை: ''தமிழகத்தில் ஆயிரம் பிரசவங்களில், 13 சிசுக்கள் இறக்கின்றன. பச்சிளம் குழந்தைகள் இறப்பில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், கர்ப்பிணியருக்கான, 'பிக்மி 2.0' என்ற இணையதளத்தில் சுயமாக பதிவு செய்து, எண் பெறும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கு, 11 வகையான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. குறிப்பாக, மஞ்சள் காமாலை, தட்டம்மை, போலியோ, ரூபெல்லா, கக்குவான் இருமல், காசநோய், தொண்டை அடைப்பான், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

முழுமையாக தடுப்பூசி பெற்ற குழந்தைகளின் சதவீதம், 76.1ல் இருந்து, 90.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 9.31 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கும், 10.21 லட்சம் கர்ப்பிணியருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியுடன், இவ்வகை தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மாதம்தோறும், 75 முதல், 81 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், 60 சதவீத பிரசவங்கள் மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் எண்ணிக்கையை, 75 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடைபெறும் ஆயிரம் பிரசவங்களில், 15 சிசுக்கள் உயிரிழப்பு என்றிருந்த எண்ணிக்கை, 13 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிசு உயிரிழப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது; கேரளா முதலிடம் பெற்றுள்ளது. விரைவில், சிசு மரணம் இல்லாத மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், சிறப்பு செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X