15,000 கிலோ ரேஷன் அரிசி: சாத்தூரில் லாரியுடன் பறிமுதல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
15,000 கிலோ ரேஷன் அரிசி: சாத்தூரில் லாரியுடன் பறிமுதல்
Added : மே 28, 2022 | |
Advertisement
 

சாத்துார்: சிவகாசியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடத்தப்பட இருந்த, 15 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி சாத்துார் அருகே பிடிபட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்துார் வெங்கடாசலபுரம் போலீஸ் செக்போஸ்டில் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தும்படி கூறினர். ஆனால் லாரியை நிறுத்தவில்லை. போலீசார் தங்கள் வாகனங்களில் லாரியை விரட்டி சென்றனர்.

சாத்துார் - கோவில்பட்டி ரோட்டில், லாரியை நிறுத்திவிட்டு லாரி டிரைவர், கிளினர் தப்பி ஓடி விட்டனர். போலீசார் லாரியை சோதனை செய்ததில் தலா, 50 கிலோ எடையில் 300 மூட்டைகளில், 15 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது.சிவகாசியில் இருந்து, இந்த ரேஷன் அரிசி திருவனந்தபுரத்திற்கு கடத்திச் செல்லப்பட இருந்தது. விசாரணையில் தெரிந்தது. போலீசார் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து விருதுநகர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X