குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்ததால் பக்தர்கள் அச்சம்.
Added : மே 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்ததால் அச்சமடைந்துள்ள பக்தர்கள் உடனடியாக அதனை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தங்கி சென்றதாக கூறப்படுகிறது. இத்தளத்தில் உள்ள சுவாமியை சூரியன், சந்திரன், சனி பகவான் மற்றும் நலன் மகாராஜா ஆகியோர் வணங்கி தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்றுள்ளனர். இத்தலத்தில் சனிபகவானின் சாப, தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. இங்கு சனீஸ்வர பகவான் நின்ற கோலத்தில், கைகூப்பியபடி, அமிர்த கலசத்தை கையில் ஏந்தியவாறு பொங்கு சனீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சியளித்து சனி ப்ரீத்தி மற்றும் பரிகார தெய்வமாக சனீஸ்வர பகவான் விளங்குகிறார்.

இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லாததால் கொடிமரம் இல்லாமல் இருந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மார்ச் ஆறாம் தேதி கோவிலுக்கு பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பணி பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் கோவிலில் உள்ள செப்புக் கவசமிட்ட கொடி மரத்தின் நடு பாகம் கடந்த ஆண்டு சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்யாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்திற்கு சாரம் அமைத்து கொடிமரம் கீழே சாயாதவாறு நிலை நிறுத்தியுள்ளனர். கொடிமரம் சேதமடைந்தது மக்களுக்கு ஆகாது என்பதால் உடனடியாக சேதமடைந்த கொடிமரத்தை சீர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொடிமரத்தின் மேல் உள்ள கொடி சேதமடைந்து உடைந்து தொங்கியுள்ளது.

இதனைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கொடிமரத்தை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவன் கோவில் கொடிமரம் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-மே-202206:48:54 IST Report Abuse
Bhaskaran அறக்கொள்ளைத்துரை ஆட்களுக்கு ஆகமத்தை பற்றி அரிச்சுவடிகூடத்தெரியாதே
Rate this:
Cancel
jay - toronto,கனடா
28-மே-202219:12:54 IST Report Abuse
jay லஞ்சம் வாங்கி ஓட்டு போட்டால் இப்படி தான் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X