சென்னையில் கருணாநிதி சிலை : வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை : சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ வெண்கல சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை திறந்து வைத்தார்.



12 அடி உயரம்



மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், இரண்டு கிரவுண்ட் நிலத்தில், கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கான பீடம் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. சிலைக்கு அஞ்சலி செலுத்த வருவோர் நடந்து செல்ல, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்த, 1.70 கோடி ரூபாய் நிதியில், பொதுப்பணித் துறையினர் செய்து முடித்துள்ளனர்.








மரியாதை



கருணாநிதி சிலை திறப்பு விழா, இன்று மாலை 5:30 மணிக்கு நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார். பின்னர் வெங்கையா நாயுடு, ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், தி.மு.க., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (44)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
30-மே-202207:40:17 IST Report Abuse
Darmavan மக்கள் என்ன சொன்னாலும் உரைக்காத மானங்கெட்டவங்கள் வரிப்பணத்தைவீணடிக்க என்ன உரிமை இவங்களுக்கு..
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
29-மே-202202:00:53 IST Report Abuse
seshadri என்னுடைய வரிப்பணம் ஒரு பகுதி இந்த மாதிரி நாசகார செயலுக்கு போகிறதே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆக்க பூர்வ செயலுக்கு இல்லாமல் இந்த மாதிரி வீணாக செலவு செய்யப்படுகிறது. இந்த ஒரு கொடியே எழுபது லட்சத்தில் ஒரு கிராமத்திற்கு எதாவது நல்ல காரியம் செய்திருக்கலாம். விடியல் அரசு என்று சொல்லி கொள்ளும் விடியாத அரசு உபயோகமாக எதுவும் செய்வதில்லை.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
28-மே-202221:03:58 IST Report Abuse
Fastrack உயிருடன் இருக்கும்போதே சிலை வைத்து அழகு பார்த்தார் தொண்டர்கள் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் வாங்கற நிலைமைக்கு ஆக்கி விட்டார்கள் சீரங்கம் பெரியார் சிலை மாதிரி காவல் நிலையம் அமைத்து பராமரிக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X