வேலுார்: தையல் தொழிலாளர்கள் பேரவை மாவட்ட கூட்டம் சத்துவாச்சாரியில் நடந்தது.வேலுார் மாவட்ட தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் 5வது மாவட்ட பேரவை கூட்டம் வேலுார் சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள மார்க். கம்யூ., கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:கடைகளில் பணிபுரியும் தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம், வீடு சார்ந்த தையல் கலைஞர்களுக்கு இலவச தையல் இயந்திரம், ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு குறைந்த பட்சம் சம்பளம் 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அவர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும்.அவர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், போனஸ், பணிக்கொடை கிடைக்க செய்ய வேண்டும். தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, அனைவருக்கும் துணிகள் வழங்க வேண்டும். 2004 ஆண்டிற்கு பிறகு கூலி உயர்வு இல்லை. அதை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சிஐடியு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட துணை தலைவர் காத்தவராயன், மார்க். கம்யூ மாவட்ட முன்னாள் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.