பெண்கள் மீது கந்துவட்டி வழக்கு
மதுரை: கல்மேடு களஞ்சியம் நகர் சண்முகவள்ளி 27. இவரது தாயார் அப்பகுதி முத்துச்செல்வி 35, புவனேஸ்வரியிடம் 33, கடனாக ரூ.5 ஆயிரம் பெற்றார். வாரந்தோறும் வட்டி செலுத்தி வந்த நிலையில் கூடுதல் வட்டி கேட்டு தாக்கியதாக கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின்கீழ் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வழிப்பறி திருடர்கள் கைதுமதுரை: செல்லுார் கீழத்தோப்பு வீரபிரபு 22. இவர் கல்லுாரி மாணவரை மிரட்டி அலைபேசி பறித்ததாக கைது செய்யப்பட்டார். மேலவாசல் செல்வம் 20. இவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரின் அலைபேசியை பறித்ததாக கைது செய்யப்பட்டார்.நகைபறிப்புசோழவந்தான்: கீழநாச்சிகுளம் ஹரிகிருஷ்ணன் 33. டூவீலர் மெக்கானிக். நேற்று முன்தினம் விதை பண்ணை அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்காக இறங்கினார். அப்போது டூவீலரில் வந்த இருவர் ஹரிகிருஷ்ணன் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.நகை திருடிய பெண்கள் கைதுதிருமங்கலம்: திருமங்கலம் அண்ணாநகர் ராமு 35. ராணுவவீரர். இவரது வீட்டில் 25 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடுபோனது. போலீசார் விசாரித்தனர். ராமுவின் அண்ணி விஜயகுமாரி, அவரது தோழி நாகதுர்கா திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்து நகை, பணத்தை மீட்டனர்.