மதுரை, :புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் தர்ணா நடந்தது.மாவட்ட துணைத்தலைவர் முருகன் வரவேற்றார். தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செல்வம் பேசினார். செயலாளர் நீதிராஜா கோரிக்கை குறித்து விளக்கினார். மாநில நிர்வாகிகள் விஜயபாஸ்கர், தமிழ், மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், ஸ்ரீரங்கநாதன், ராஜேந்திரன், அமுதா, ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ராம்தாஸ் நன்றி கூறினார்.பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு உரிமையை திரும்ப வழங்குவது, ஜன. 2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவது, புதிய கல்விக் கொள்கையை கைவிடுவது, சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், மருத்துவ தேர்வு வாரிய நர்ஸ்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.