ராசிபுரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, ராசிபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் மா.கம்யூ., இ.கம்யூ., மற்றும் வி.சி., கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ராசிபுரம் மா.கம்யூ., கட்சியின் மார்க்சிஸ்ட் நகர செயலாளர் சண்முகம், இ.கம்யூ., கட்சியின் நகர செயலாளர் மணிமாறன், வி.சி., கட்சியின் நகர செயலாளர் ஆதவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.