புனே,பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி கோப்பை வென்றது. பைனலில் 4 ரன் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை கடைசி ஓவரில் வீழ்த்தியது.
புனேயில், பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் கிரிக்கெட் 4வது சீசன் நடந்தது. நேற்று நடந்த பைனலில், வெலாசிட்டி, சூப்பர்நோவாஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெலாசிட்டி கேப்டன் தீப்தி சர்மா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சூப்பர்நோவாஸ் அணிக்கு டீன்டிரா டாட்டின் (62), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (44), பிரியா புனியா (28) கைகொடுக்க 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது.
வெலாசிட்டி அணிக்கு ஷபாலி (15), யஸ்திகா (13) சுமாரான துவக்கம் தந்தனர். லாரா அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. சோபி வீசிய 20வது ஓவரில் 12 ரன் மட்டும் கிடைத்தன. வெலாசிட்டி அணி 20 ஓவரில் 161/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. லாரா (65), சிம்ரன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
சூப்பர்நோவாஸ் அணி, மூன்றாவது முறையாக (2018, 2019, 2022) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது---