பள்ளிபாளையம், கவுண்டனுார் பகுதியில் கடை வைத்திருக்கும் பெண்ணிடம், டூவீலரில் வந்த மர்ம நபர்கள், 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.
பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த கவுண்டனுார் பகுதியைச் சேர்ந்த சித்ராதேவி, 43. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, டூவீலரில், இரண்டு பேர் பெட்டிக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் மாஸ்க் அணிந்து, தலையில் ஹெல்மெட் போட்டு இருந்தனர்.
அதில் ஓருவர் வண்டியில் இருந்து கொண்டு, மற்றொருவர் இறங்கி சென்று சித்ராதேவியிடம் சிகரெட் கேட்டுள்ளார். அவர் எடுத்து தருவதற்குள், அவரது கழுத்தில் போட்டிருந்த, ஐந்து சவரன் செயினை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து வெப்படை போலீசில் நேற்று புகார் கொடுக்கப்பட்டது.
வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.