நாமக்கல், போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள், வரும், ஜூன், 1ல், ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து, நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள், வரும், ஜூன், 1ல், காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஏழு, நான்கு சக்கர வாகனங்கள், 16 இரு சக்கர வாகனங்கள் என, மொத்தம், 23 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
வாங்க விருப்பம் உள்ளவர்கள், ஜூன், 1ல், காலை, 9:45 மணிக்கு முன், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 5,000 ரூபாய் முன் பணம் செலுத்தி, ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.
முன் பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். ஏலம் எடுத்தவுடன் முழு பணத்தையும், ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஆதார் அல்லது டிரைவிங் லைசென்ஸ், இரண்டு ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.