உதவிப் பேராசிரியர்கள் இருவர் பணியிடமாற்றம்
Added : மே 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:மாணவர்கள் புகாரை தொடர்ந்து, கோவை அரசு கலைக் கல்லுாரியின் இரு உதவிப் பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.கோவை அரசு கலைக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், கடந்த 24ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 'கல்லுாரியில் புவியியல் துறை பேராசிரியர் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக கல்லுாரிக்கு வராமலும், முறையாக வகுப்புகள் எடுக்காமல் உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், பேராசிரியை ஒருவர், கல்லூரியில் பணிபுரியும் சக பேராசிரியர் சரியாக பாடம் எடுக்கவிடாமல் இடையூறு செய்வதாக புகார் அளித்தார். இவ்விரு புகார்கள் குறித்து விசாரிக்க, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.இதனடிப்படையில், மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் உலகி விசாரணை நடத்தினார். புகாருக்குள்ளான அரசு கலைக் கல்லுாரியில் பணிபுரியும் இரு உதவி பேராசிரியர்களும் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி கூறுகையில், ''நிர்வாக காரணங்களுக்காக உதவி பேராசிரியர் பாத்திமா மரியம், திருச்சி அரசு கலைக் கல்லுாரிக்கும், உதவி பேராசிரியர் ரமேஷ், சிவகாசி அரசு கலைக் கல்லுாரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X