காங்கேயம்தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம், காங்கேயம் கிரிக்கெட் அகாடமி சார்பில், காங்கேயம் அருகே படியாண்டிபாளையத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு, இரண்டாம் கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி நடந்தது.
இதில் தமிழகம் முழுவதில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தேர்வாகும் வீரர்கள், தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தியா--நேபாள அணிகளுக்கு இடையே நேபாளத்தில், மாற்றுத்திறனாளிகள் டி--20 கிரிக்கெட் போட்டி, ஜூன் 10, 11, 12ல் நடக்கிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிவண்ணன், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் ஹமீது இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க செயலாளர் வீரராஜ், துணைத்தலைவர் பிரதாப், பயிற்சியாளர்கள் சந்திரன், வெங்கடேஷ், வாயிப்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.