மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டியிலுள்ள பெருமாள் கோவில் வீதியில், சங்கர், 28, என்பவர், காய்கறி கடை நடத்துகிறார். அங்கு, கடந்த, 26ல் ஒரு கிரேடு தக்காளி மாயமானது. கடையிலுள்ள கேமராவை பரிசோதித்ததில், 'ஸ்கூட்டி'யில் வந்த மர்ம நபர், 3,000 ரூபாய் மதிப்பிலான தக்காளியை திருடியது தெரிந்தது. சங்கர் புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்ததில், ராசிபுரம், வெண்ணந்துார், தங்க சாலை வீதியை சேர்ந்த சின்ராஜ், 32, திருடியது தெரிந்தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர். அவர், பால் பாக்கெட், தக்காளி, பழங்கள் ஆகியவற்றை திருடி குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.