சேலம், சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், 51 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால், அந்த வீடுகளை அகற்றிக்கொள்ள, 2020ல், ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் தலைமையில் அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தனர். அதனால், 20க்கும் மேற்பட்டோர், அங்கிருந்து வெளியேறினர். அதில், 31 பேர் வெளியேறவில்லை.
இதனால், ரயில்வே அதிகாரி அருள்செல்வன், மேற்கு தாசில்தார் தமிழரசி தலைமையில், ரயில்வே டி.எஸ்.பி., குணசேகரன், சூரமங்கலம் போலீசார் பாதுகாப்புடன், நேற்று பொக்லைன் மூலம்,
51 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. அதேபோல் அரியாகவுண்டம்பட்டியில் புறம்போக்கு நிலத்தில், 10க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி இருந்தனர். அவற்றை காலி செய்து வீடுகளை ஒப்படைக்க, மேற்கு தாசில்தார் தமிழரசு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், காலி செய்யாததால், நேற்று, வருவாய்த்துறையினர், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புக்களை அகற்றினர்.
1.54 ஏக்கர் மீட்புகெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்துறையினர், செந்தாரப்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து நேற்று ஆய்வு செய்தனர். அப்போது,
ஆக்கிரமிப்பில் இருந்த, 1.54 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
அறிவுரை
கெங்கவல்லி அருகே, தெடாவூர் - தம்மம்பட்டி சாலையில், 6 கோடி ரூபாயில், சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி சாலை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை, மே, 30க்குள்(நாளை) அகற்றிக்கொள்ள, ஆத்துார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.