ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம்கடம்பத்துார் அருகே மீட்பு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம்கடம்பத்துார் அருகே மீட்பு
Added : மே 29, 2022 | |
Advertisement
 

கடம்பத்துார்,-கடம்பத்துார் அருகே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலம் வருவாய்த் துறையினரால் மீட்கப்பட்டது.கடம்பத்துார் அடுத்துள்ளது மடத்துக்குப்பம் கிராமம். இப்பகுதியில், அரசுக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலம் தனியார் ஒருவரால் ஆக்கிரமித்து குடிசை வீடு போடப்பட்டிருந்தது.இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, நேற்று காலை, மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் உஷாராணி உட்பட வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் டி.எஸ்.பி., சந்திரதாசன் தலைமையில், கடம்பத்துார் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X