ஆவடி,--ஆவடியில் அமைந்துள்ள, ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தின், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி முகாமில், பயிற்சியை நிறைவு செய்த 1,247 காவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. டி.ஐ.ஜி., கேவல் சிங் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் எஸ்.எஸ்.சதுர்வேதி கலந்து கொண்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்புரையாற்றினார்.இதில், தமிழகத்தை சேர்ந்த 291 பேர் உட்பட தெலுங்கானா, புதுச்சேரி, டில்லி உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த காவலர்கள் பயிற்சி முடித்து, பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.சிறப்பாக தேர்ச்சி பெற்ற 10 காவலர்களுக்கும், சிறப்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒரு பயிற்சியாளருக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.