மதுரை, மே 29-
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தென்தமிழகத்திலேயே முதல்முறையாக கணைய, சிறுநீரக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் செந்தில், ஆனந்த், தினேஷ், மருத்துவ குழுவினர் இணைந்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில் கூறியாதாவது: சர்க்கரை நோயினால் முதல்கட்டமாக சிறுநீரகம், கண்கள், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்படையும். அவர்களுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் மீண்டும் சிறுநீரகம் பாதிக்கப்படும். ஆனால் சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள் 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆரோக்கியமுடன் வாழலாம். தெலுங்கானா மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த சசிகாந்த் 34, சிறுநீரகம் பாதிப்படைந்து செயலிழந்த நிலையில் வேலம்மாள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.இவருக்கு கணைய, சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்தார். பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் பிரித்தா 32, சிறுநீரகம் பாதிப்படைந்து இங்கு சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக உள்ளார். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்து டயாலிசிஸ் போன்றவை செய்ய வேண்டியதில்லை. மற்ற அறுவை சிகிச்சைகளைக் காட்டிலும் கணைய, சிறுநீரக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்வதால் சர்க்கரை நோயின் முதல்நிலையால் பாதிப்படையும் 40 வயதிற்குட்பட்ட நோயாளிகள் பூரண குணமடைந்து ஆரோக்கியமாக வழலாம், என்றார்.