திண்டிவனம்:திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், செந்தமிழ்ச் செல்வன், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளை மாவட்டம் முழுதும்நலத்திட்ட உதவி வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுஉட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.