விடுமுறை நாட்களிலும் செயல்படும் நுாலகம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
விடுமுறை நாட்களிலும் செயல்படும் நுாலகம்
Updated : மே 29, 2022 | Added : மே 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
Latest district News

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் நுாலகம் போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் செயல்படுகிறது.திருக்கோவிலுார் முழுநேர நுாலகத்திற்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்போர் மட்டுமின்றி மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களும் அதிகளவில் வருகின்றனர். இதன் காரணமாக நுாலகத்தின் விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளிலும் நுாலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நுாலகம் அனைத்து நாட்களிலும் திறந்திருப்பதால் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்து ஆர்வமுடன் குறிப்பு எடுத்து படித்து வருகின்றனர்.குரூப் 4 தேர்வு முடியும் வரை தொடர்ந்து வார விடுமுறை நாட்களிலும் நுாலகம் செயல்படும் என வாசகர் வட்ட தலைவர் உதியன் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X