திருக்கோவிலுார்:திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம்காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க, வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு தீபாராதனை, பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது.பக்தர்களின் சிவபுராண கோஷத்துடன் பிரதோஷ நாயகர் கோவிலை வலம் வந்தார்.