பங்காரம் லட்சுமி கலை அறிவியல்கல்லுாரியில் ரத்ததான முகாம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
பங்காரம் லட்சுமி கலை அறிவியல்கல்லுாரியில் ரத்ததான முகாம்
Added : மே 29, 2022 | |
Advertisement
 

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.முகாமிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.


கல்லுாரி முதல்வர்கள் சிராஜ்தீன், பாஸ்கரன், துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா வாழ்த்திப் பேசினர்.கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் விஜயகுமார், தொட்டியம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரண்யா, சுகாதார ஆய்வாளர் அசலாம்பாள் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.ஏற்பாடுகளை தேசிய மாணவர் ஆசிரியர் அன்பரசு, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் செஞ்சுருள் சங்க அலுவலர் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் அரவிந்தன் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X