கள்ளக்குறிச்சியில் தர்ணா | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கள்ளக்குறிச்சியில் தர்ணா
Added : மே 29, 2022 | |
Advertisement
 
Latest district News

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த தர்ணாவிற்கு, மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கொளஞ்சிவேலு, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் கோரிக்கை குறித்து விளக்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாநில துணைத் தலைவர் வாசுகி, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தர்ணாவில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்த செய்ய வேண்டும். அனைத்து தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.மாவட்ட பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X