திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சென்னை ஹேலஜன் மேலாண்மை இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் நடந்த முகாமிற்கு, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜாராமன், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு நேர்காணல் நடத்தினார்.முகாமில், தேர்வு செய்யப்பட்ட 130 மாணவ, மாணவிகளுக்கு வேலை நியமன உத்தரவை கல்லுாரியின் தலைவர் செல்வராஜ் வழங்கினார். செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர். துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.