திருக்கோவிலுார்:மணலுார்ப்பேட்டை பேரூராட்சி சார்பில் தீவிர துாய்மைப் பணி முகாம் நடந்தது.செயல் அலுவலர் மேகநாதன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் தலைமை தாங்கி, துாய்மைப் பணியை துவக்கி வைத்தார். பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் நகர் முழுதும் துாய்மைப் பணியை மேற்கொண்டனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், நகரை துாய்மையாக வைத்துக் கொள்ளவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.