தேனி : தேனி, மார்க்கையன்கோட்டை மதகருப்பு மகன் மனோஜ்குமார், 19. இவர் 15 வயது சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக தெரிவித்தார். சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மனோஜ்குமார், சிறுமியை கத்தியால் மே 19ல் தாக்கினார். பழனிசெட்டிபட்டி போலீசார் மே 20ல் மனோஜ் குமாரை கைது செய்து தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர். 'உடல்நிலை சரியில்லை' என தெரிவித்த மனோஜ்குமாரை,போலீஸ்காரர்கள் ராஜவேல், பாக்கியராஜ் நேற்று தேனி அரசு மருத்துவமனையில் பரிசோ தனை செய்ய அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிந்து சிறைக்கு திரும்பும் போது, வாயில் அருகே மனோஜ்குமார் தப்பினார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி., விசாரித்து வருகிறார்.