பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் மில்லில், அரிசியை அரைத்து மாவாக்க பதுக்கி வைத்து இருந்த, 1,800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மில் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்.ஐ., பாரதநேரு மற்றும் போலீசார், பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள மாவு மில்லில் நேற்று மாலை சோதனை செய்தனர்.மில்லில், 45 கிலோ எடை கொண்ட, 40 சாக்கு மூட்டைகளில், 1,800 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும்; அரிசியை அரைத்து மாவாக்கி, அதிக லாபத்துக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மில் உரிமையாளரான பொள்ளாச்சியை சேர்ந்த அன்பழகன், 44 என்பவரை தேடி வருகின்றனர்.