'கொடை'யில் குவிந்த பயணியர் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
'கொடை'யில் குவிந்த பயணியர்
Added : மே 29, 2022 | |
Advertisement
 
Latest district News



கொடைக்கானல் : கொடைக்கானலில் மலர் கண்காட்சி, கோடை விழா நடக்கும் நிலையில், வார விடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர்.



திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று காலை முதல் இடைவிடாத சாரல் மழைக்கு நடுவே, பிரையன்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பூக்களை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். மோயர் சதுக்கம், குணா குகை, துாண் பாறை, பைன்பாரஸ்ட், செட்டியார் பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் என, அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதியது. மழைக்கு நடுவே நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

நகர் பகுதியில் உள்ள பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவிகளையும் கண்டு ரசித்தனர். நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X