போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Added : மே 29, 2022 | |
Advertisement
 



திட்டக்குடி : திட்டக்குடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.



கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் அழகுராஜ், 22. இவர், 14 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகக்கூறி கடந்த மார்ச் 6ம் தேதி தாலி கட்டியுள்ளார்.இதையறிந்த உறவினர்கள் பெண்ணுக்கு வயது குறைவு என்பதால், அவரது வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அதன்பின் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது சென்ற அழகுராஜ், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் அண்ணன் மற்றும் தந்தை, அழகுராஜை தட்டிக்கேட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அழகுராஜை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X