கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராம ஊராட்சி பகுதிகளில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
அதேபோல் அரியபெருமானுார், கிடங்குடையாம்பட்டு, பழைய சிறுவங்கூர் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.கலெக்டர் ஸ்ரீதர் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்களை துார் வாரும் பணி, அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதிதாக குளங்களை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மணி, செயற் பொறியாளர் செல்வகுமார், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் மற்றும் பி.டி.ஓ.,க்கள் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
சங்கராபுரம்
கிடங்குடையான்பட்டு கிராமத்தில் கலெக்டர் ஸ்ரீதர் 1,000 தேக்கு மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திட்ட இயக்குனர் மணி, செயற் பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற் பொறியாளர் நித்யா, பி.டி.ஓ., ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் சபான்கான் மற்றும் ஊராட்சி தலைவர், பொது மக்கள் பங்கேற்றனர்.