![]()
|
துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரி துறைமுகம் மீண்டும் பயன்பாட்டிற்கு வர வேண்டுமெனில் கழிமுக ஆற்றுப்பகுதியில் போதுமான ஆழம் இருக்க வேண்டும். 5 மீட்டர் ஆழம் இருந்தால் மீண்டும் துறைமுகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விடலாம்.ஆனால் கழிமுக பகுதியில் குவியும் கடற்கரை மணல் எப்போதுமே சிக்கலாகவே இருந்து வருகிறது.'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், புதுச்சேரி துறைமுகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டு, துறைமுகத் துறை, கழிவுமுக பகுதியில் கடந்தாண்டு ஆழம் அளவிடும் பணியை முடுக்கி விட்டது.
கண்டெய்னர்கள் இறக்கும் இடத்தில் சரக்கு கப்பல் திரும்புவதற்கு போதுமான ஆழம் உள்ளதா என தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 7 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு மணல் துார்ந்துள்ளது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கே.எஸ்.ஆர். மரைன் சர்வீஸ் நிறுவனம் மூலம் துார் வாரும் பணி துவங்கியது. இதுவரை 5.80 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் துார்வாரப்பட்டு உள்ளது.இப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. துார் வாரப்படும் மணல், ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு, டூப்ளக்ஸ் சிலை அருகே செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.முகத்துவாரத்தில் இருந்து துறைமுக ஜெட்டி வரை 2 கி.மீ., முகத்துவார கால்வாய் உள்ளது. இதில் கப்பல்கள் சென்றுவர குறைந்தபட்சம் 5 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும்.தற்போது 6 மீட்டர் ஆழத்திற்கு துார் வாரப்பட்டுள்ளதால் இனி கப்பல்கள் சென்றுவர சிக்கல் இருக்காது.இதேபோல் கற்கள் நிறைந்த 'சேண்ட்ராப்' பகுதியில் 8 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும் என துார்வாரும்போது நிபந்தனை விதிக்கப்பட்டது.இந்த பகுதியில் தற்போது 9 மீட்டர் ஆழத்திற்கு துார் வாரப்பட்டுள்ளதால் கப்பல்கள் எளிதாக முகத்துவார கால்வாய் பகுதியாக துறைமுகத்திற்கு சென்றுவர முடியும்.ஜூன் மாதத்திற்குள் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே முகத்துவார பகுதியில் தினசரி 3,500 கியூபிக் மீட்டர் மணல் 'டிரஜ்ஜர்' இயந்திரம் மூலம் அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.அகற்ற கெடுபுதிய துறைமுககத்தின் கால்வாய் பகுதியில் கரையோரத்தில் தற்போது மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை, துார்வாரும் பணிக்கு இடைஞ்சலாக உள்ளன. ,எனவே, துார் வாரும் பணியை விரைந்து முடிக்கும் வகையில் இன்று 30ம் தேதிக்குள் அனைத்து விசைப்படகுகளையும் அகற்ற வேண்டும் என கெடு விதிக்கப் பட்டுள்ளது.இது தொடர்பாக அப்பகுதியில் துறைமுகத் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளதோடு, மீன்பிடி படகுகளிலும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப் பட்டுள்ளது.துார் வாரும் பணி முழுவதும் முடிந்ததும், அடுத்த கட்டமாக கப்பல் போக்குவரத்து துவக்க அனைத்து முயற்சிகளையும் புதுச்சேரி அரசு எடுக்க திட்டமிட்டுள்ளது.
![]()
|
இதில் 17.10 கோடி ரூபாய் துறைமுகம் துார்வார செலவிடப்பட்டுள்ளது. மீதி 90 லட்சம் ரூபாய் புதுச்சேரி அரசு கையிருப்பில் உள்ளது.80 சதவீதம் துார் வாரும் பணி முடிந்துள்ளதால் மீதமுள்ள தொகையை விடுவிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.