அரூர்:
அரூர், மொரப்பூர் உள்பட மாவட்டத்தில், 450 கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவை, 48 தனியார் கோழிப்பண்ணை நிறுவனங்களிலிருந்து குஞ்சுகளை பெற்று, 45 நாட்கள் வளர்த்து, அதன் பின், அதனுடைய எடையை பொறுத்து ஒரு கிலோவுக்கு, 6.50 ரூபாய் என, கணக்கிட்டு கோழிப்பண்ணையாளர்கள் வளர்ப்புக்கூலி பெற்று வருகின்றனர்.
வளர்ப்புக்கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டுமென, கோழிப்பண்ணை உரிமை
யாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கூலி உயர்த்தப்
படாததால், கடந்த மே, 20 முதல், தர்மபுரி மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சங்க மாவட்ட நிர்வாகிகள், நேற்று கூறியதாவது: வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு, 12.50 ரூபாய் தர வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். ஏற்கனவே, மூன்று கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று கோவையில் நடந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மேலும், போராட்டம் முடியும் வரை, புதிதாக கோழிக்குஞ்சுகளை வளர்க்க வாங்க மாட்டோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.