தென்காசி:பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, அரசு பள்ளி ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி கர்ப்பமடைந்தார். இது குறித்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில், தென்காசி, நாகல்குளத்தைச் சேர்ந்த சங்கர், 22, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், இம்மாணவியை, அதே பள்ளியில் 2019ல், பத்தாம் வகுப்பு படித்த போது, அங்கு அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய இசக்கியப்பன், 54, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.நேற்று இசக்கியப்பனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்த போலீசார், சங்கரை தேடி வருகின்றனர்.