மனைப்பிரிவுகளில் ஒதுக்கிய திறந்தவெளி நிலம்.. கபளீகரம்! தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதால் அதிர்ச்சி
Added : ஜூன் 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை,:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மனை விற்பனை நிறுவனங்கள் மற்றும் பெரிய கட்டுமான நிறுவனங்கள், பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கிய, ஓ.ஆர்.எஸ்., எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், சத்தமின்றி தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. சாலையோர, திறந்தவெளி பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட பொது நிலங்கள், தனியாரால் கபளீகரம் செய்யப்படுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.சென்னை மற்றும் விரிவாக்கப்பகுதிகளில், நகர், ஊரமைப்பு சட்டப்படி மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக்கு குழுமம் எனப்படும், சி.எம்.டி.ஏ.,வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள திட்டங்களில், 10 சதவீத நிலம் திறந்தவெளி ஒதுக்கீடாக இருக்க வேண்டும்.

அனுமதியில்லை
இவ்வாறு, ஒதுக்கப்படும் நிலங்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில், பத்திரம் வாயிலாக ஒப்படைக்க வேண்டும். இந்த நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் பூங்கா அமைக்க பயன்படுத்தலாம். இதை வேறு தேவைகளுக்க பயன்படுத்த நகர், ஊரமைப்பு சட்டப்படி அனுமதி இல்லை. சென்னை பெருநகரில் ஆண்டுக்கு, 300 மனைப்பிரிவு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றன. தில் பெறப்படும் ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி பொதுப் பயன்பாட்டு நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிளில், மனைப் பிரிவு விற்பனை நிறுவனங்கள், பெரிய கட்டுமான நிறுவனங்கள் சார்பில், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட பொது நிலங்கள், சமீப காலமாக தனியார் ஆக்கிரமிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தவிர, பல இடங்களில் இவ்வகை நிலங்கள், அதன் பழைய உரிமையாளர்களால், சட்ட விரோத முறையில், தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்து உள்ளது. இவ்வகை சட்ட விரோத செயல்களால், பெரிய கட்டுமானங்களுக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்படுவது தடை பட்டு, அத்துமீறிய கட்டடங்கள் முளைப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோசடி
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில், 1989ல் சி.எம்.டி.ஏ., ஒரு மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் அளித்தது. அதில், 10 சதவீத ஓ.எஸ்.ஆர்., நிலம் ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சில் ஒப்படைப்பு செய்யப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலம் தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இதே போல், சென்னை, புறநகர் மற்றும் சுற்றுவட்டார விரிவாக்கப் பகுதிகளின் பல இடங்களில், பழைய உரிமையாளர்கள், தங்கள் பெயரில் இருக்கும் பட்டாவை பயன்படுத்தி, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மோசடியாக விற்பனை செய்துள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன. மனைப் பிரிவு விற்பனை மற்றும் கட்டுமான நிறுவனங்களால் ஒதுக்கப்படும் பொதுவெளி நிலங்களை முறையாக பாதுகாக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த இடங்களில் வேலி அமைத்து, உரிய நிதி ஒதுக்கீடு செய்து பூங்காக்கள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில், பொதுப் பயன்பாட்டிற்கான திறந்த வெளி நிலங்களை முறையாக பாதுகாக்காவிட்டால், பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெறுவதோடு, சட்ட விரோத கட்டடங்கள் முளைத்து, பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கும் என, கட்டுமான வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நடவடிக்கை என்ன?

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுப் பயன்பாட்டிற்கான திறந்தவெளி நிலம் அபகரிப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பொது மக்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.இந்த வழக்குகளில், உரிய பதில் மனுக்களை தாக்கல் செய்ய, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறை ஆகியவை முறையாக ஒத்துழைத்தால் தான் ஓ.எஸ்.ஆர்., நில அபகரிப்பை தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X