ஆரணி அருகே காதல் தம்பதி கோர்ட்டில் ஆஜர் | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
ஆரணி அருகே காதல் தம்பதி கோர்ட்டில் ஆஜர்
Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
 

ஆரணி:ஆரணி அருகே, காதல் தம்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ராகுல், 22; புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயாதேவி, 19; வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காலித்து கடந்த, 15ல் திருமணம் செய்து கொண்டு, கண்ணமங்கலம் போலீசில் தஞ்சமடைந்தனர்.போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து, சமாதானப்படுத்தி வைத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஜெயதேவியின் பெற்றோர், திருமண வயதை அடையாத என் மகளை, ராகுல் ஏமாற்றி கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் எனவும், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயனிடம் புகார் செய்தனர். இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் ராகுல் மற்றும் ஜெயதேவியை, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கார்த்திகேயன் விசாரணை நடத்தியதில், இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என உறுதி செய்து, போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை வீட்டில் விடும்படி உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X