தஞ்சாவூர்:தஞ்சாவூரில், கொடுக்கல் -- வாங்கால் தகராறில், 'காதி கிராப்ட்' உதவி மேலாளரை கடத்திய சம்பவத்தில் போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர், வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா ஷா, 25. இவர், திருச்சி சாலையில் உள்ள காதி கிராப்ட் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அப்துல்லா ஷாவை, 8 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது.
இது பற்றி, அப்துல்லா ஷாவின் தந்தை, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்துல்லா ஷாவை மீட்டு, பெரம்பலுார் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்த மனோகரன்,31, என்பவரை கைது செய்தன்ர். கொடுக்கல் -- வாங்கல் தகராறில் கடத்தலில் ஈடுபட்ட மற்ற ஏழு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.